/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாரம்பரிய நெல் ரகங்கள் ஒப்பந்த முறையில் சாகுபடி
/
பாரம்பரிய நெல் ரகங்கள் ஒப்பந்த முறையில் சாகுபடி
ADDED : ஆக 25, 2024 07:03 AM
பனமரத்துப்பட்டி: விவசாயத்தில் மூலிகை தாவரங்கள், பணப்பயிர்கள் ஒப்பந்த முறையில் சாகுபடி செய்வது வழக்கம். தற்போது பாரம்பரிய நெல் ரகங்களை ஒப்பந்த முறையில் சாகுபடி செய்ய தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து பனமரத்துப்பட்டி, சாமகுட்டப்பட்டியை சேர்ந்த, இயற்கை விவசாயி வெங்கடேஷ்பாபு, 45, கூறியதாவது: பாரம்ப-ரிய நெல் ரகங்களான கறுப்பு கவுனி, காட்டு யானம், மாப்-பிள்ளை சம்பா ஆகியவற்றை இயற்கை முறையில் சாகுபடி செய்து தோல் நீக்கி அரிசியாக விற்கிறேன். பாரம்பரிய அரிசியை மக்கள் விரும்பி வாங்குவதால் அதன் தேவை நாளுக்கு நாள் அதி-கரித்து வருகிறது.
ஆரம்பத்தில் எனது, 5 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்தேன். தற்-போது ஒப்பந்த முறையில், 10 விவசாயிகள் சாகுபடி செய்கின்-றனர். தவிர நிலத்தை குத்ததைக்கு எடுத்தும் நெல் சாகுபடி செய்-கிறேன்.
ஆர்வமுள்ள விவசாயிகளிடம் கறுப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, ரத்தசாலி, பூங்கார், காட்டுயானம் உள்ளிட்ட பாரம்பரிய நெல் விதைகளை கொடுக்கிறோம். இயற்கை முறையில் விளை-வித்த நெல் ரகங்களை அறுவடை செய்த பின், திரும்ப விலைக்கு வாங்கிக்கொள்கிறேன். நெல் தோல் மட்டும் நீக்கி பாலீஷ் செய்-யாமல் விற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.