ADDED : மார் 11, 2024 02:19 AM
அ நிறம் | அளவு
சேலம்:டில்லியில்
நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு, தடியடி
நடத்திய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, சேலம் ஜங்ஷன் ரயில்வே
ஸ்டேஷன் முன், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று
ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில தலைவர் தங்கராஜ் தலைமையில் திரளான
விவசாயிகள் பங்கேற்றனர். முன்னதாக ரயில் மறியல் போராட்டத்துக்கு
முயன்ற விவசாயிகளை போலீசார் தடுத்ததால் ஆர்ப்பாட்டத்துடன்
முடித்துக்கொண்டனர்.
