ADDED : மார் 21, 2024 02:03 AM
சேலம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் லோக்சபா தேர்தல் வேட்பு மனு தாக்கல் நேற்று காலை தொடங்கியது. மத்திய தொழிற்பாதுகாப்புபடை, ஆயுதப்படை, உள்ளூர் போலீசார் என, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு வேட்புமனு பெறப்பட்டது.
மனு தாக்கல் நடக்கும் அலுவலகத்தில் இருந்து, 100 மீ.,க்குள், வேட்பாளருடன் அதிகபட்சம், 3 வாகனம், 5 பேர் வரை அனுமதிக்கப்பட்டு மனுதாக்கல் நடந்தது. அதில் சேலம் வித்யா நகர், சோழன் மேற்கு தெருவை சேர்ந்த பிஸ்மில்லா மக்கள் கட்சி நிறுவனர் அகமது ஷாஜஹான், காலை, 11:55 மணிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி பெற்றுக்கொண்டார்.
அதேபோல் சூரமங்கலம் தாலுகா அலுவலகத்தில் உரிய பாதுகாப்புடன் உதவி கலெக்டர் தலைமையில் வேட்பு மனு பெற ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு முதல் நாளில் யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.
