sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முளைப்பாரி ஊர்வலம்

/

முளைப்பாரி ஊர்வலம்

முளைப்பாரி ஊர்வலம்

முளைப்பாரி ஊர்வலம்


ADDED : ஜூலை 11, 2024 12:55 AM

Google News

ADDED : ஜூலை 11, 2024 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்ககிரி மலை அடிவாரத்தில் உள்ள சோமேஸ்வரர் கோவில் கும்-பாபிஷேகம் நாளை நடக்க உள்ளது. நேற்று முன்தினம் பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் இருந்து, ஏராளமான பக்தர்கள், தீர்த்தக்-குடங்களை எடுத்து வந்தனர்.

அதேபோல் பதியமிட்ட முளைப்பாலிகையை எடுத்து வந்த பெண்கள், சங்ககிரி, வி.என்.பாளையம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்டு பழைய மாரியம்மன் கோவில் வழியே பவானி பிரதான சாலை, தெலுங்கர் தெரு, தில்லைவிநா-யகர் கோவில், பழைய இடைப்பாடி சாலை வழியே கோவிலை அடைந்தனர். இதில் வி.என்.பாளையம் ஊர் மக்கள் சார்பில் ராமேஸ்வரத்தில் இருந்து புனித நீர், கோவிலுக்கு எடுத்து வரப்-பட்டது.

சீதா ராமச்சந்திர மூர்த்திசேலம், பச்சப்பட்டி அருகே கிருஷ்ணா நகரில் சீதா ராமச்சந்திர மூர்த்தி கோவில் உள்ளது. அதன் கோபுர விமான கும்பாபி ேஷக விழா இன்று மதியம் பூர்வாங்க திருமஞ்சனத்துடன் தொடங்குகிறது. நாளை காலை, 5:00 மணிக்கு சதஸ்தான பூஜை, கோபுர விமானங்களுக்கு அபி ேஷகம், இரு கால யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்து, புனிதநீர் கல-சங்கள் புறப்பட்டு, 6:30 மணிக்கு மேல், 7:00 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபி ேஷகம் நடக்க உள்ளது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபி ேஷகம், அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்படும். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை, 6:00 மணிக்கு மேல் சீதா ராமர் திருக்கல்யாண உற்சவம் நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us