ADDED : செப் 14, 2024 03:28 AM
மகுடஞ்சாவடி: சேலம் அருகே கஞ்சமலை சித்தர்கோவிலில், நாளை கும்பாபி ேஷகம் நடக்க உள்ளது. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சேலம் மாநகர போலீஸ், போக்குவரத்து போலீஸ் உயர-திகாரிகள், வாகனம் நிறுத்துமிடம், கேமரா அமைவிடம், கூட்-டத்தை கட்டுப்படுத்தும் விதம் குறித்து நேற்று ஆய்வு செய்தனர். இதையடுத்து இரவு, 7:00 மணிக்கு கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், துவார பூஜை, முதலாம் கால மண்டபார்ச்சனை, கண-பதி ஹோமம் உள்ளிட்டவை நடந்தன.
நாளை காலை, 4:30 மணிக்கு மேல் திருப்பள்ளி எழுச்சி, தமிழ்தி-ருமுறை பாராயணம், 7:00 மணிக்கு பூர்ணாஹூதி, மகா தீபாரா-தனை, யாகசாலையில் இருந்து திருவருள், திருக்குடங்கள் புறப்-பாடு நடக்க உள்ளது. இதனிடையே காலை, 6:30 முதல், 7:30 மணிக்குள் மூலஸ்தான, ராஜ கோபுர கும்பாபிஷேகம், 7:30 முதல், 8:00 மணிக்குள் ஞானசற்குரு பால முருகன் கோவில் மஹா கும்பாபிஷேகம், 7:35 முதல், 8:15 மணிக்குள் காளியம்ம-னுக்கு கும்பாபிஷேகம், 9:00 முதல், 10:45 மணிக்குள், கஞ்சமலை சித்தேஸ்வர சுவாமிக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
