ADDED : ஜன 24, 2025 04:01 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்: பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஓமலுார் அருகே முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி கதிர்செட்டிப்பட்டி, கண்ணடி மாரியம்மன் கோவில் முன் நேற்று எருதாட்டம் நடந்தது.
அதில், 20க்கும் மேற்பட்ட காளைகளை பிடித்தபடி, ஏராளமான இளைஞர்கள், கோவிலை சுற்றி வலம் வந்தனர். சிலர், பொம்மைகளை காட்டி காளைகளை கோபமூட்டினர். பாதுகாப்புக்கு மூங்கில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், ஏராளமான மக்கள் சுற்றி நின்று எருதாட்டத்தை கண்டுகளித்தனர்.
