ADDED : மார் 16, 2025 01:58 AM
அ நிறம் | அளவு
பெண் மர்மச்சாவு
சேலம்:சேலம், இரும்பாலை அருகே அரியாகவுண்டம்பட்டி, கிட்டனுாரை சேர்ந்தவர் வடிவேல், 50. தறித்தொழிலாளி. இவரது மனைவி பாப்பா, 45. இவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் பாப்பா, பெற்றோர் வீட்டில் இரு மாதங்களாக இருந்தார். சில நாட்களுக்கு முன், சமாதானம் பேசி வடிவேல், மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால் நேற்று முன்தினம் இரவு, அவர் இறந்ததாக, பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக, பெற்றோர் அளித்த புகார்படி, இரும்பாலை போலீசார் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.
