தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முன்னாள் தலைவருக்குகத்திக்குத்து

முன்னாள் தலைவருக்குகத்திக்குத்து

முன்னாள் தலைவருக்குகத்திக்குத்து


ADDED : மார் 28, 2025 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2025 01:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முன்னாள் தலைவருக்குகத்திக்குத்து

ஆத்துார்:நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம், 53. அ.தி.மு.க.,வை சேர்ந்தவர். நரசிங்கபுரம் நகராட்சி முன்னாள் தலைவரான இவர், நேற்று இரவு, 7:00 மணிக்கு, நரசிங்கபுரத்தை சேர்ந்த, பழ வியாபாரி கணேசன், 55, என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, குடும்ப பிரச்னை குறித்து பேசியுள்ளனர். அதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கணேசன், ஸ்ரீராமை கத்தியால் குத்தினார். இதில் அவரது தலை பகுதியில் காயம் ஏற்பட்டது. அவரை, குடும்பத்தினர் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆத்துார் டவுன் போலீசார், பழ வியாபாரியை தேடுகின்றனர்.

இதுகுறித்து ஸ்ரீராமின் மகள் சவுமியா கூறுகையில், 'எனக்கும், கணவர் ராஜூவுக்கும் இடையே குடும்ப பிரச்னையால் பிரிந்து வாழ்கிறோம். கணவர் குடும்பத்தினருக்கு ஆதரவாக கணேசன் பேசி வந்தார். இதில் கணேசன், என் தந்தையை குத்தியுள்ளார்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us