ADDED : ஏப் 01, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த.வெ.க.,வினர் ஆர்ப்பாட்டம்
புதுச்சத்திரம்:புதுச்சத்திரத்தில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும். அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும். ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சத்திரம் ஒன்றிய தமிழக வெற்றிக்கழகம் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ராகவேந்திரா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சதீஸ்,
ஆறு அம்ச கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

