நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாளை தேரோட்டம்
காடையாம்பட்டி, சந்தைப்பேட்டை செல்வ மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, நேற்று முன்தினம் அம்மன் திருவீதி உலா நடந்தது. நேற்று காலை, ஏராளமான பக்தர்கள், கோவில் முன் அக்னி குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடந்து பொங்கல் வைத்து, ஆடு, கோழிகளை பலியிட்டனர். இரவு அக்னி கரக ஊர்வலம் நடந்தது. இன்று மாலை கோவில் தேர் நிலைபெயர்ச்சி விழா, நாளை காலை, 9:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. நாளை மறுநாள் சத்தாபரணம், 6ல் மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிறைவு பெறுகிறது.

