ADDED : ஏப் 12, 2025 01:44 AM
அ நிறம் | அளவு
ஆடுகள்விலை சரிவு
மேட்டூர்:கொளத்துார் சந்தைக்கு நேற்று அதிகாலை முதல், தர்மபுரி, மேச்சேரி, கர்நாடகா எல்லை கிராமங்களில் இருந்து ஆடுகளை, விவசாயிகள் கொண்டு வந்தனர். வழக்கத்தை விட வியாபாரிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
கடந்த வாரம் அதிகபட்சம், 22,000 ரூபாய்க்கு விற்ற வெள்ளாடுகள் நேற்று, 18,000 முதல், 19,000 ரூபாய்க்கு விற்பனையானது. குட்டி ஆடுகளை கடந்த வாரத்தை விட, 500 ரூபாய் வரை விலை குறைவாக வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.
***********************
