நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, மல்லுார் டவுன் பஞ்சாயத்தில், 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அங்கு, தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சந்தைப்பேட்டை, மாரியம்மன் கோவில் தெரு, பார்க் தெரு, பி.மேட்டூர் சாலை, 8வது வார்டு, வெற்றி நகர் உள்ளிட்ட இடங்களில், மாலை நேரங்களில் நாய்கள் கும்பலாக சுற்றித்திரிகின்றன.
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சாலையில் நிற்கின்றன. பாதசாரிகளும் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை உள்ளது. சிறுவர்களை கண்டால் நாய்கள் விரட்டுகின்றன. ஏற்கனவே சந்தைப்பேட்டையில் நாய் கடிக்கு பலர் ஆளாகியுள்ளனர். அதனால் தெருநாய்களை கட்டுப்படுத்த, டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.