ADDED : டிச 18, 2025 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: ஓமலுார் வக்கீல் சங்கம் சார்பில், அங்குள்ள நீதிமன்றம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார்.
அதில், 'இ - பைலிங்' முறையை கைவிடக்கோரி கோஷம் எழுப்பினர். செயலர் தியாகராஜன், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.அதேபோல் வாழப்பாடியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன், வாழப்பாடி வக்கீல் சங்கத்தலைவர் வீரமுத்து தலைமையில் வக்கீல்கள், கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 'இ - பைலிங்' முறையை ரத்து செய்யக்கோரி, கோஷம் எழுப்பினர்.

