தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆண்டு விழா

ஆண்டு விழா

ஆண்டு விழா


ADDED : ஏப் 02, 2026 04:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2026 04:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், சேலம், சோனா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, 9ம் ஆண்டு விழா, அக்கல்லுாரி வள்ளியப்பா கலையரங்க கூடத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. துணைத்தலைவர்கள் சொக்கு, தியாகு முன்னிலை வகித்தனர். தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

முதல்வர் காதர் நவாஸ், மாணவர்களின் சாதனைகள் அடங்கிய படத்தொகுப்புடன் கூடிய ஆண்டறிக்கையை சமர்ப்பித்து, கல்லுாரி சாதனைகளை பட்டியலிட்டார். டெலாய்ட் டூஷ் டோமாட்சு இந்தியா எல்.எல்.பி., பங்குதாரர் சேகர், சிறப்பு விருந்தினராக பேசினார்.

தொடர்ந்து கல்வி, விளையாட்டில் அசத்தியவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள், நாட்டு நலப்பணி திட் டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள், தேசிய மாணவர் படை மாணவர்கள், சிறந்த தமிழ், ஆங்கில பேச்சாளர்கள், நுாலகத்தை நன்முறையில் பயன்படுத்தியவர்கள், பொருளாதார அளவில் பின்தங்கிய மாணவர்கள், பல்கலை அளவில் மாணவர்களை தரவரிசையில் இடம்பெறச்செய்த துறைகள், மாணவர்களின் மருத்துவம் என, 15,00,000 ரூபாய், கல்லுாரி நிர்வாகம் சார்பில் மாணவர்களுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தமிழ்த்துறை சார்பில் எழுதப்பட்ட, 'பக்தியும் தமிழும்(சைவம்)' எனும் ஆய்வு நுாலை, தலைவர் வள்ளியப்பா வெளியிட, தமிழ் துறை தலைவர் விஜயராகவன் பெற்றுக்கொண்டார். சோனா கல்வி நிறுவன முதல்வர்கள் கனகராஜ், செந்தில்குமார், கவிதா, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us