sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

11 தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

/

11 தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

11 தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

11 தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு


ADDED : ஆக 30, 2024 04:40 AM

Google News

ADDED : ஆக 30, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்டத்தில், 11 சட்ட

சபை தொகுதி வரைவு வாக்காளர் சுருக்கமுறை திருத்த பட்டி-யலை, கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன், மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி நேற்று வெளியிட்டார்.

இதுகுறித்து பிருந்தாதேவி கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள, 3,257 ஓட்டுச்சாவடிகளில் ஆய்வு செய்யப்பட்டது. அதன்-படி, 7 ஓட்டுச்சாவடிகள் உருவாக்க, 30 சாவடிகளில் பிரிவு மாற்றம் செய்ய, 10 சாவடிகளை இடமாற்ற, 19 சாவடிகளின் கட்-டடத்தை மாற்ற, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமி-ருந்து அறிக்கை வரப்பெற்றுள்ளது. இந்த அலுவலர்கள் பரிந்-துரை மீது ஆட்சேபனை, புது ஆலோசனை இருப்பின், செப்., 4 மாலை, 5:00 மணிக்குள், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலு-வலர் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்கலாம். அதை விதிமுறைக்குட்பட்டு பரிசீலித்து இறுதி செய்து இந்திய தேர்தல் கமிஷன் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்படும். மேலும், 2025 ஜன., 1 தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணி தொடர்பாக வரைவு வாக்-காளர் பட்டியல், அக்., 29ல் வெளியிடப்பட உள்ளது. தவிர ஒவ்-வொரு காலாண்டிலும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்படும். அதன்படி வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய ஜன., 1, ஏப்., 1, ஜூலை, 1, அக்., 1 ஆகியவற்றை தகுதி நாளாக கொண்டு வாக்-காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்யலாம். 17 வயது நிரம்பி-யவர், முன்கூட்டியே விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிப்போரின் வயது, 18 பூர்த்தியாகும் அடுத்த காலாண்டில் அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத் சிங், மாவட்ட கலெக்டரின் நேர்-முக உதவியாளர் சிவசுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்-கேற்றனர்.






      Dinamalar
      Follow us