தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரூ. 1.27 கோடிக்குபருத்தி வர்த்தகம்

ரூ. 1.27 கோடிக்குபருத்தி வர்த்தகம்

ரூ. 1.27 கோடிக்குபருத்தி வர்த்தகம்


ADDED : ஏப் 08, 2025 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 01:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரூ. 1.27 கோடிக்குபருத்தி வர்த்தகம்

ஆத்துார்:ஆத்துார் வேளாண் கூட்டுறவு சங்கத்தில், 1.27 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. ஆத்துார், புதுப்பேட்டை வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் பருத்தி, மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. நேற்று நடந்த பருத்தி ஏலத்திற்கு ஆத்துார், கெங்கவல்லி பகுதி மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, சின்னசேலம், பெரம்பலுார் பகுதிகளில் இருந்து, 884 விவசாயிகள், 1,960.32 குவிண்டால் பருத்தி விற்பனைக்கு கொண்டு வந்தனர். 18 வியாபாரிகள், பருத்தி தரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர்.

இதில், பி.டி., ரகம் குவிண்டால், 6,689 முதல், 7,879 ரூபாய்; டி.சி.ெஹச்., ரகம் குவிண்டால், 8,689 முதல், 10 ஆயிரத்து, 359 ரூபாய்; கொட்டு பருத்தி குவிண்டால், 3,589 முதல், 5,589 ரூபாய்க்கு விற்பனையானது. 1,960.32 குவிண்டால் பருத்தி, 1.27 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை விட, 1,237.92 குவிண்டால் பருத்தி கூடுதலாக விற்பனைக்கு வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us