தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 13 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல்

13 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல்

13 கிலோ வெள்ளி கொலுசு பறிமுதல்


ADDED : ஏப் 09, 2024 02:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2024 02:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்;சேலம் மேற்கு சட்டசபை தொகுதி பறக்கும்படை அலுவலர் பிரபுகுமார் தலைமையிலான குழுவினர், நேற்று இரவு, 8:45 மணிக்கு, சேலம் திருமகள் பைபாஸ் - மூலப்பிள்ளையார் சாலை சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அசஸ் மொபட்டை நிறுத்தி சோதனையிட்டதில், 13 கிலோ, 231 கிராம் வெள்ளி கொலுசு வைத்திருப்பது தெரிந்தது. விசாரணையில், மொபட்டை ஒட்டி வந்தவர் செவ்வாய்பேட்டை, சையத் மாதர் தெருவை சேர்ந்த முனீர், 40, என்பதும், அவரிடம் கொலுசுக்கான ஆவணம், ரசீது எதுவும் இல்லையென தெரிவித்தார். பிடிபட்ட வெள்ளி கொலுசு மதிப்பு, 9.35 லட்ச ரூபாய் இருக்கும். அவை மொத்தமாக பறிமுதல் செய்து, சூரமங்கலம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

* தலைவாசல் அருகே, சிவசங்கராபுரம் கிராமத்தில் நேற்று கெங்கவல்லி தொகுதி பறக்கும்படை அலுவலர் பெரியசாமி தலைமையிலான குழுவினர் ஆய்வு பணி மேற்கொண்டனர். அப்போது, சிவசங்கராபுரம் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன், 40, என்பவரது பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வைத்திருந்த, 52 ஆயிரத்து, 570 ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை, கெங்கவல்லி உதவி தேர்தல் அலுவலர் வெங்கடேசனிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us