sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிருஷ்ணகிரி, ஓமலுார் உட்பட 17 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்கிறது

/

கிருஷ்ணகிரி, ஓமலுார் உட்பட 17 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்கிறது

கிருஷ்ணகிரி, ஓமலுார் உட்பட 17 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்கிறது

கிருஷ்ணகிரி, ஓமலுார் உட்பட 17 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்கிறது


ADDED : ஆக 27, 2024 05:22 AM

Google News

ADDED : ஆக 27, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் 17 சுங்கச்சாவடிகளில், செப்டம்பர் 1 முதல் கட்-டணம் உயர்கிறது.

தமிழகத்தில் 64 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்க கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, பல சுங்கச்சாவடிகளில் லோக்-சபா தேர்தலுக்கு பின், ஜூன் 3ம் தேதி கட்டண உயர்வு நடைமு-றைக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து, தற்போது 17 சுங்கச்சாவடிகளில் செப்-டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சென்னசமுத்-திரம், எலியார்பதி, கொடை ரோடு, கிருஷ்ணகிரி, மேட்டுப்-பட்டி, மொரட்டண்டி, நாதக்கரை, ஸ்ரீபெரும்புதுார், ஓமலுார், பாளையம், புதுார் பாண்டியபுரம், சமயபுரம், ஸ்ரீவைகுண்டம், வீரசோழபுரம், வேலன்செட்டியூர், விஜயமங்கலம், விக்கிர-வாண்டி ஆகியவை கட்டணம் உயர்த்தப்பட உள்ள சுங்கச்சாவ-டிகள். இங்கு, 5 சதவீதம் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. இதனால், வாகனங்களின் டயர்களுக்கு தகுந்தபடி, 5 முதல் 150 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது.

இதற்கிடையே, 26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நடைமு-றைக்கு வருவதாக தகவல் பரவி வருகிறது. கட்டண உயர்வு குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முறையான அறி-விப்பை வெளியிடாததே, இதற்கு காரணம்.

மேலும், சாலை அமைப்பிற்கான கட்டணத்தை வசூல் செய்த பின், சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும். ஆனால், இந்த விதியை பின்பற்றாமல், கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. இதனால், சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ்களின் கட்-டணம் மறைமுகமாக உயர்ந்து வருகிறது.






      Dinamalar
      Follow us