ADDED : ஏப் 13, 2024 11:07 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சேலம் தெற்கு தொகுதி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலச்சந்தர், கருப்பூரில் உள்ள ஓட்டு எண்ணும் மையத்தில் நேற்று ஆய்வு செய்தார்.தொடர்ந்து அவர் கூறியதாவது:
தெற்கு தொகுதியில், 241 ஓட்டுப்பதிவு மையங்களில் இருந்து கொண்டுவரப்படும் பதிவான ஓட்டுப்பெட்டிகளையும், அதுகுறித்த பொருட்களையும் முறையாக வரிசைப்படி பதிவு செய்து, பாதுகாப்பு அறையில் வைக்கப்படும். ஓட்டு எண்ணும்போது, 14 மேஜைகள், 18 சுற்றுகளில் எண்ணும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
