/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2 கிலோ கஞ்சா பறிமுதல்வாலிபர் தப்பி ஓட்டம்
/
2 கிலோ கஞ்சா பறிமுதல்வாலிபர் தப்பி ஓட்டம்
ADDED : மார் 13, 2025 02:11 AM
2 கிலோ கஞ்சா பறிமுதல்வாலிபர் தப்பி ஓட்டம்
சேலம்: சேலம் ரயில்வே ஸ்டேஷன், 2வது நடைமேடையில், மதுவிலக்கு போலீசார் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கையில் பொட்டலத்துடன் ஒருவர் நின்றிருந்தார். போலீசாரை பார்த்ததும், அந்த நபர், பொட்டலத்தை போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார், பொட்டலத்தை பிரித்த பார்த்தபோது, 2 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
2 பேர் கைது
அதேபோல் சேலம், அன்னதாப்பட்டி போலீசார், மூணாங்கரட்டில் ரோந்து சென்றபோது, அங்கு நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்ததில், பழைய பஸ் ஸ்டாண்ட், பூ மார்க்கெட் பகுதியை சேர்ந்த அப்துல் கரீம், 22, தாதகாப்பட்டி ஹானஸ்ட்ராஜ், 20, என்பதும், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவர்களிடம், 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.