நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி, ஜன. 4-
தேவூர் அருகே கோனேரிப்பட்டி ஊராட்சி பாலிருச்சம்பாளையத்தை சேர்ந்த, விவசாயி பழனிசாமி, 47. இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீடு முன்புறம், 6 ஆடுகளை கட்டி வைத்திருந்தார்.
நேற்று காலை பார்த்தபோது, 6 ஆடுகளையும் மர்ம விலங்கு கடித்திருந்தது. 2 ஆடுகள் இறந்திருந்தன. கால்நடை மருத்துவர் கண்ணன், காயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். ஆடுகளை கடித்தது மர்ம விலங்கா, வெறிநாயா என, அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.