/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காவிரியில் 4ம் நாளில் 25 சிலைகள் கரைப்பு
/
காவிரியில் 4ம் நாளில் 25 சிலைகள் கரைப்பு
ADDED : செப் 11, 2024 06:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: சேலம், நாமக்கல் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வழிபட்ட விநாயகர் சிலைகளை, லாரிகள், வேன் மூலம் கொண்டு வந்து, சேலம் மாவட்டம் பூலாம்பட்டி, கல்வடங்கம் காவிரி ஆறுகளில், 3 நாட்களாக கரைத்தனர். 4ம் நாளான நேற்று, கல்வடங்கத்தில், 14 சிலைகளை கரைத்து பக்தர்கள் புனித நீராடினர். அதில் குடும்பம், குடும்பமாக வந்தவர்கள், ஆற்றங்கரையில் ஆட்டம் போட்டு மகிழ்ந்தனர்.
அதேபோல் பூலாம்பட்டி காவிரி ஆற்றில், 11 விநாயகர் சிலைகளை, விசைப்படகில் சென்று ஆற்றின் நடுவே கரைத்தனர். இரு பகுதிகளிலும், 25 சிலைகள் கரைக்கப்பட்டன.

