3 பேர் மாயம்
தாரமங்கலம்:தாரமங்கலம், சிக்கம்பட்டி, தார்க்காட்டை சேர்ந்தவர் முத்துசாமி, 38. இவரது மனைவி தமிழரசி, 28. இவர்களுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த, 9ல் வீட்டில் இருந்த தமிழரசியை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், மனைவியை கண்டுபிடித்து கொடுக்கும்படி நேற்று முத்துசாமி அளித்த புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல் தாரமங்கலம் காட்டுபிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி, 24. இவரது கணவர் விக்னேஷ், 27, சென்ட்ரிங் வேலை செய்கிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த, 11ல் வேலைக்கு சென்ற விக்னேஷ், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து புவனேஸ்வரி புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆத்துார், பழனியாபுரியை சேர்ந்த கூலித்தொழிலாளி விஜயகுமார், 34. இவரது மனைவி அமுதவள்ளி, 29. இவர்களுக்கு, 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த, 16 அதிகாலை, அமுதவள்ளியை காணவில்லை. இதுகுறித்து விஜயகுமார் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.