/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று முதல் 3 நாட்கள் அத்தி வரதர் தரிசனம்
/
இன்று முதல் 3 நாட்கள் அத்தி வரதர் தரிசனம்
ADDED : ஜூலை 01, 2024 03:39 AM
சேலம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆனந்தசரஸ் குளத்தில் இருந்து, 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, 'அத்தி வரதர்' வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 2019 ஜூலை, 1 முதல், 48 நாட்கள், பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதையொட்டி, சேலம் பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவில் உள்பட சில கோவில்கள், மடங்களில் அத்தி மரத்தால் செய்யப்பட்ட, 'அத்தி வரதர்' சிலை, பகதர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
அதேபோல் ஆண்டுதோறும் சேலத்தில் ஜூலையில், அத்தி வரதர் தரிசனம் பக்தர்களுக்கு வைக்கப்படுகிறது. அதன்படி பட்டைக்கோவில் அருகே கனகராஜகணபதி தெருவில் உள்ள ராமர் பஜனை மடத்தில் இன்று முதல், 3 வரை, காலை, 5:00 முதல் இரவு, 10:00 மணி வரை, அத்தி வரதர் தரிசனம் நடக்கிறது. இந்த, 3 நாட்கள் தரிசனத்தில் சவுராஷ்டிரா சமூக பாகவதர்களின் பக்தி பஜனை, இன்னிசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
'கள்'ளுக்கு அனுமதி
பா.ஜ., வலியுறுத்தல்
சேலம், ஜூலை 1-
பா.ஜ., சார்பில், சேலம் லோக்சபா தொகுதி ஆய்வு கூட்டம் மரவனேரியில் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற பின், அக்கட்சி மாநில துணை தலைவர் நாகராஜன், நிருபர்களிடம் கூறியதாவது:
டாஸ்மாக் சரக்கில், 'கிக்' இல்லை என, அமைச்சராக இருந்துகொண்டு துரைமுருகன் பொறுப்பின்றி பேசியது வேதனை. டாஸ்மாக்கில் விலை அதிகமாக உள்ளதால், மலிவாக கிடைக்கும் கள்ளச்சாரயத்தை வாங்கி குடிக்கின்றனர். இதை ஒழிக்க ஒரே வழி, 'கள்' இறக்கி விற்க அரசு அனுமதிக்க வேண்டும். மேலும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் அரசால், 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. அதேபோல் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறப்பவர்களுக்கு, 3 லட்சத்துக்கு பதில், 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நியாய முறையில் நடக்குமா என்ற சந்தேகம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில தலைவர்களான, சுற்றுச்சூழல் பிரிவு கோபிநாத், கூட்டுறவு பிரிவு வெங்கடாசலம், லோக்சபா தொகுதி பொறுப்பாளர் அண்ணாதுரை, சேலம் மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, மாவட்ட தலைவர்கள் சண்முகநாதன்(கிழக்கு), சுதிர்முருகன்(மேற்கு), மாவட்ட பார்வையாளர் முருகேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.