ADDED : பிப் 02, 2025 01:37 AM
4 அணைகளுக்கும் நீர்வரத்து குறைவு
மேட்டூர் : கர்நாடகாவின் காவிரி குறுக்கே, கே.ஆர்.எஸ்., அதன் துணையாறுகள் குறுக்கே கபினி, ேஹரங்கி, ேஹமாவதி அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் கே.ஆர்.எஸ்., கபினி, ேஹரங்கி, ேஹமாவதி அணைகளின் மொத்த நீர்மட்டம் முறையே, 124.8, 65, 129, 117 அடிகள். 4 அணைகளுக்கும் முறையே நேற்று, வினாடிக்கு, 391, 190, 160, 356 கனஅடி நீர் மட்டும் வந்தது. அணைகளில் இருந்து வினாடிக்கு, 1,250, 500, 100, 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்வரத்து சரிந்ததால் அணைகளின் நீர்மட்டம், 120.21, 60.47, 106.6, 98.29 அடியாக இருந்தது.
மேலும், 4 அணைகளின் மொத்த நீர் இருப்பு, 114.6 டி.எம்.சி., மழை தீவிரம் குறைந்து நீர்வரத்து சரிந்ததால் நேற்று, 4 அணைகளிலும், 85.76 டி.எம்.சி., நீர் இருந்தது. ஒரு மாதத்தில், 4 அணைகளிலும், 28.84 டி.எம்.சி., சரிந்துள்ளது. எனினும் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தை விட, நடப்பாண்டு, 4 அணைகளிலும் நீர் இருப்பு கூடுதலாக இருந்தது.