/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
4 கிராம மக்கள் எதிர்ப்பு: சேலம் தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்ட இடம் மாற்றம்

ADDED : மார் 24, 2024 01:39 AM
ஓமலுார், தி.மு.க.,வின், லோக்சபா தேர்தல் அறிக்கையில் சேலம் விமான நிலையம் விரிவாக்கம் செய்து மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தும்பிப்பாடி, பொட்டியபுரம், சிக்கனம்பட்டி, காமலாபுரம் கிராம மக்கள், தி.மு.க.,வை புறக்கணிக்கிறோம் என தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம், சேலம் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி அறிமுக கூட்டம், தும்பிப்பாடி மாரியம்மன் கோவில் அருகே நடக்கும் என, அக்கட்சி தரப்பில் தகவல் வெளியானது. இதை அறிந்த, 4 கிராம மக்கள், வேட்பாளர் அறிமுக கூட்டம், அங்கு நடத்துவதை விரும்பவில்லை. இத்தகவல் போலீஸ் மூலம், தி.மு.க., தரப்புக்கு சென்றது. தேர்தல் நேரத்தில் அசம்பாவிதத்தை தவிர்க்க, தும்பிப்பாடியில் நடக்க இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டு, சரக்கப்பிள்ளையூர் நால் ரோடு பகுதியில் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் நேற்று நடந்தது.