தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பறிமுதல் வாகனங்கள்ரூ.4.16 லட்சத்துக்கு ஏலம்

பறிமுதல் வாகனங்கள்ரூ.4.16 லட்சத்துக்கு ஏலம்

பறிமுதல் வாகனங்கள்ரூ.4.16 லட்சத்துக்கு ஏலம்


ADDED : மார் 30, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2025 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பறிமுதல் வாகனங்கள்ரூ.4.16 லட்சத்துக்கு ஏலம்

சேலம்:சேலம் மாவட்டத்தில், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், 2017 முதல், 2025 வரை, கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட, 25 வாகனங்களை பறிமுதல் செய்து, நேற்று பொது ஏலத்தில் விட்டனர். சர்க்கார் கொல்லப்பட்டியில் உள்ள உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில், டி.எஸ்.பி., வடிவேலு தலைமையில், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன் உள்ளிட்டோரின் மேற்பார்வையில் ஏலம் நடந்தது. 79 பேர் ஏலம் கோரினர். அதில், இரு சக்கர வாகனம் - 19, மூன்று சக்கர வாகனம் - 1, நான்கு சக்கர வாகனம் - 5 என, 25 வாகனங்கள், 4.16 லட்சம் ரூபாய்க்கு ஏலம்போனது. அதற்கு தனியே, 66,942 ரூபாய், ஜி.எஸ்.டி., வசூலிக்கப்பட்டது என, போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us