/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
490 கிலோ புகையிலை, 5 வாகனம், ரூ.4.87 லட்சம் பறிமுதல்: வீட்டை வாடகைக்கு எடுத்து பதுக்கிய 2 பேர் கைது

ADDED : ஆக 11, 2024 03:39 AM
ஆத்துார்: வீட்டை வாடகைக்கு எடுத்து புகையிலை பதுக்கிய இருவரை கைது செய்த போலீசார், 490 கிலோ புகையிலை, இரு கார்கள் உள்பட, 5 வாகனங்கள், புகையிலை விற்பனை மூலம் கிடைத்த, 4.87 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் ஆத்துார் டவுன் போலீசார், முல்லைவாடி, ஸ்ரீராம் நகரில் உள்ள வீடு, அதற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த வேன்களில் நேற்று சோதனை செய்தனர். அப்போது, 490 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததால் பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய இண்டிகோ, எர்டிகா கார்கள், இரு பொலிரோ சரக்கு வேன்கள், ஒரு டியோ மொபட் என, 5 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
புகையிலை பொருட்களை விற்று வைத்திருந்த, 4.87 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணையில் கல்பகனுார், இளங்கோ நகரை சேர்ந்த ராஜதுரை, 30, ஆத்துார், புத்துமாரியம்மன் கோவில் தெரு சத்யராஜ், 29, ஆகியோர், முல்லைவாடியில் வீடு வாடகைக்கு எடுத்து புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கார், வேன்களில் மற்ற மாவட்டங்களுக்கு கடத்திச்சென்று விற்று வந்தது தெரிந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து விசாரிக்கின்றனர். மேலும் பறிமுதல் செய்த புகையிலை பொருட்கள், வாகனங்களை, சேலம் உணவு பொருள் பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர்.