தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரூ.51 லட்சத்துக்கு பருத்தி ஏலம்வரத்து, விற்பனை உயர்வு

ரூ.51 லட்சத்துக்கு பருத்தி ஏலம்வரத்து, விற்பனை உயர்வு

ரூ.51 லட்சத்துக்கு பருத்தி ஏலம்வரத்து, விற்பனை உயர்வு


ADDED : ஜன 30, 2025 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரூ.51 லட்சத்துக்கு பருத்தி ஏலம்வரத்து, விற்பனை உயர்வு

வாழப்பாடி:வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், 1,560 மூட்டைகளை கொண்டு வந்தனர். குவிண்டால் ஆர்.சி.எச்., ரகம், 6,789 முதல், 8,301 ரூபாய், டி.சி.எச்., ரகம், 11,672 முதல், 9,565 ரூபாய், கொட்டு ரகம், 3,559 முதல், 5,255 ரூபாய் வரை விலை போனது.

இதன்மூலம், 51.20 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வார ஏலத்தில், 620 மூட்டைகள் மட்டும் கொண்டு வரப்பட்டு, 16.50 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. இந்த வாரம், பருத்தி வரத்து, விற்பனை, 2 மடங்கு அதிகரித்ததாக, வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மக்காச்சோளம் ஏலம்கெங்கவல்லி அருகே, ஒதியத்துார் பிரிவு சாலையில், வேளாண் ஒழுங்குமுறை கூடம் உள்ளது. அங்கு, 'இ-நாம்' முறையில் மக்காச்சோள ஏலம் நேற்று நடந்தது. விவசாயிகள், 753.06 குவிண்டால் மக்காச்

சோளத்தை கொண்டு வந்தனர். சேலம், ஆத்துார், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, பெரம்பலுாரை சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்றனர். குவிண்டால் மக்காச்சோளம், 2,332 முதல், 2,356 ரூபாய் வரை விலைபோனது. இதன்மூலம், 17.71 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடந்ததாக, விற்பனை கூட மேற்பார்வையாளர் மணியரசன் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us