/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
7 வயது சிறுமியிடம் 'சீண்டல்' தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
/
7 வயது சிறுமியிடம் 'சீண்டல்' தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
7 வயது சிறுமியிடம் 'சீண்டல்' தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
7 வயது சிறுமியிடம் 'சீண்டல்' தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை
ADDED : ஆக 30, 2024 04:41 AM
சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே பாப்பம்பாடியை சேர்ந்-தவர் மனோகரன் 26. கூலித்தொழிலாளியான இவர், 2018 ஜூலை, 22ல் அப்பகுதியில் இருந்த, 7 வயது சிறுமியிடம், சாக்லெட் வாங்கி தருவதாக கூறி அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்படி, தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மனோகரனை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி ஜெயந்தி விசாரித்தார். முடிவில் மனோகரனுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை, 5,000 ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, 3 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் அறிவுறுத்தினார்.