/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டிபார்ட்மென்ட் ஸ்டோரில்ரூ.70,000 திருட்டு
/
டிபார்ட்மென்ட் ஸ்டோரில்ரூ.70,000 திருட்டு
ADDED : ஏப் 05, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டிபார்ட்மென்ட் ஸ்டோரில்ரூ.70,000 திருட்டு
சேலம்:சேலம், தாதகாப்பட்டி அம்பாள் ஏரி சாலையை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 38. கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே, டிபார்ட்மென்ட் ஸ்டோர் நடத்துகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிச் சென்றார்.
நேற்று காலை வந்தபோது, கடையின் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை இடிக்கப்பட்டிருந்தது. அதன் வழியே உள்ளே நுழைந்த மர்மநபர்கள், மேஜையில் இருந்த, 70,000 ரூபாயை திருடிச்சென்றதும் தெரிந்தது.
இதுகுறித்து ரஞ்சித்குமார் புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து
விசாரிக்கின்றனர்.

