/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மணமான பெண்ணிடம் சில்மிஷம் டி.இ.ஓ., உதவியாளர் மீது வழக்கு
/
மணமான பெண்ணிடம் சில்மிஷம் டி.இ.ஓ., உதவியாளர் மீது வழக்கு
மணமான பெண்ணிடம் சில்மிஷம் டி.இ.ஓ., உதவியாளர் மீது வழக்கு
மணமான பெண்ணிடம் சில்மிஷம் டி.இ.ஓ., உதவியாளர் மீது வழக்கு
ADDED : ஆக 19, 2024 06:05 AM
மேட்டூர்: திருமணமான பெண்ணிடம் சில்மிஷம் செய்த-தாக, ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் உதவி-யாளர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
சேலம் மாவட்டம் கொளத்துார், கண்ணாமூச்சி ஊராட்சி செட்டியூர் அடுத்த சுப்ரமணியபுரத்தை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் நாச்சிமுத்து, 42. இவ-ரது மனைவி, உடல்நலக்குறைவால் இரு ஆண்-டுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு, 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.
நாச்சிமுத்து நேற்று முன்தினம், செட்டியூரில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்து, திருமணமான, 21 வயது பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து அப்பெண் புகார்படி, மேட்டூர் மகளிர் போலீசார், நாச்சிமுத்து மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
பாதிக்கப்பட்ட பெண், 5 ஆண்டுக்கு முன் செட்-டியூர் உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார். அப்போது நாச்சிமுத்து, ஆசிரியராக இருந்தார். பின் இடமாற்றப்பட்டு ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் உதவியாளராக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம், அந்த மாணவி வீட்டுக்கு நாச்சிமுத்து வந்தார்.ஆசிரியர் என்பதால் வீட்டுக்குள் அழைத்துச்சென்று அப்பெண் டீ போட்டு கொடுத்தார். அப்போது நாச்-சிமுத்து, சில்மிஷம் செய்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.