/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வைக்கோல் ஏற்றி வந்த லாரி மீது மின் கம்பி உரசியதில் தீ விபத்து
/
வைக்கோல் ஏற்றி வந்த லாரி மீது மின் கம்பி உரசியதில் தீ விபத்து
வைக்கோல் ஏற்றி வந்த லாரி மீது மின் கம்பி உரசியதில் தீ விபத்து
வைக்கோல் ஏற்றி வந்த லாரி மீது மின் கம்பி உரசியதில் தீ விபத்து
ADDED : மே 02, 2024 11:55 AM
தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுார், ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மருதமுத்து, 50. இவரது தோட்டத்துக்கு நேற்று மதியம், 12:00 மணிக்கு வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி வந்தது. அப்போது உயர் மின் அழுத்த கம்பியில் வைக்கோல் கட்டு உரசியதில் தீப்பற்றியது. தகவல் அறிந்து, கெங்கவல்லி தீயணைப்பு துறையினர், மதியம், 12:20 மணிக்கு வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வைக்கோல் கட்டுகள், லாரியின் ஒரு பகுதி எரிந்து நாசமானது. வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
சோளத்தட்டு சேதம்
அதேபோல் மேட்டூர், வீரனுார், பாலமரத்திட்டு பகுதியை சேர்ந்த விவசாயி பச்சியண்ணன், 60. இவர் கால்நடைகளுக்கு வீடு அருகே சோளத்தட்டு கட்டுகளை விலைக்கு வாங்கி வைத்திருந்தார். நேற்று மதியம், 1:30 மணிக்கு சோளத்தட்டுகள் தீப்பற்றி எரிந்தன. மேட்டூர் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். எனினும், 20,000 ரூபாய் மதிப்பில் சோளத்தட்டுகள் சேதமாகின. கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.