/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
/
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED : செப் 03, 2024 03:01 AM
வீரபாண்டி: அமாவாசையான நேற்று, கோவில்களில் பக்தர்கள் குடும்பத்-துடன் சென்று சுவாமி தரிசனம் செய்து, திருஷ்டி தோஷங்கள் விலக தீபம் ஏற்றி, உப்பு மிளகு போட்டு வழிபட்டனர்.
சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள, பிர-சித்தி பெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், ஆவணி மாத அமாவாசையையொட்டி, மூலவர் கந்தசாமிக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பல வகையான மங்கல பொருட்களால் அபி ேஷகம் செய்து, தங்க கவசம் அணிவித்து, ராஜ அலங்காரத்தில் மகா தீபாராதனை காட்டப்பட்டது.
ஸ்ரீ விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் கந்தசா-மிக்கு சிறப்பு தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சோமவார அமாவாசையான நேற்று, ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து, திருஷ்டி தோஷங்கள் விலக கோவில் முன் தீபம் ஏற்றி, உப்பு மிளகு போட்டு வழிபட்டனர்.
இதே போல் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில், அமா-வாசை கோவில் என அழைக்கப்படும், இளம்பிள்ளை அருகே கஞ்சமலை அடிவாரத்தில் உள்ள சித்தர்கோவில் சித்தேஸ்வரர் கோவில் மற்றும் அனைத்து அம்மன், அங்காளம்மன் கோவில்க-ளிலும் அமாவாசையையொட்டி, நடந்த சிறப்பு பூஜையில் ஏராள-மான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
* இடைப்பாடி அருகே, கல்வடங்கம் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்-வேறு திவ்ய பொருள்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.