/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் நீர் திறப்பு சற்று அதிகரிப்பு
/
மேட்டூர் நீர் திறப்பு சற்று அதிகரிப்பு
ADDED : மே 02, 2024 11:56 AM
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் நீடிக்கும் வறட்சியால் நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு, 82 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று, 67 கனஅடியாக சரிந்தது. இந்நிலையில் டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி காவிரி கரையோர மாவட்டங்களிலும் வெயில் தாக்கம் அதிகம் உள்ளதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. கடந்த, 20ல் வினாடிக்கு, 1,500 கனஅடியாக இருந்த அணை குடிநீருக்கான நீர்திறப்பு, 21ல், 1,200 கனஅடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை, 6:00 மணி முதல், நீர்திறப்பு வினாடிக்கு, 1,400 கனஅடியாக சற்று அதிகரிக்கப்பட்டது.
மனைவியை தொடர்ந்து கணவரும் தற்கொலை
ஏத்தாப்பூர்: ஏத்தாப்பூர், 9வது வார்டை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 41. லாரி டிரைவராக பணிபுரிந்தார். இவரது மனைவி பச்சியம்மாள், 36. இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில், இரு மாதங்களுக்கு முன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் துக்கத்தில் இருந்த ஜெயபிரகாஷ் நேற்று மதியம், 12:00 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மகள், மகன் உள்ளனர். ஏத்தாப்பூர் போலீசார், லாரி டிரைவர் உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.

