/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோட்டை மாரியம்மன் கோவிலில் கூடுதலாக 20 கேமரா பொருத்தம்
/
கோட்டை மாரியம்மன் கோவிலில் கூடுதலாக 20 கேமரா பொருத்தம்
கோட்டை மாரியம்மன் கோவிலில் கூடுதலாக 20 கேமரா பொருத்தம்
கோட்டை மாரியம்மன் கோவிலில் கூடுதலாக 20 கேமரா பொருத்தம்
ADDED : ஜூலை 20, 2024 09:33 AM
சேலம்: சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருவிழா, வரும், 23 முதல் ஆக., 16 வரை நடக்க உள்ளது. இதை முன்னிட்டு முன்னேற்பாடு பணி நடந்து வருகிறது. இதனிடையே கோவிலை ஏற்றி ஏற்கனவே, 36 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் விழாவை முன்னிட்டு, பொங்கல் வைக்கும் இடம், மொட்டை அடிக்கும் இடம், ராஜகோபுரம் வெளியே செல்லும் வழி உள்ளிட்ட இடங்களில் கூடுதலாக, 20 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல் கோவில் உள்ளே தற்காலிக போலீஸ் மையம் அமைக்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க, ஆங்காங்கே தடுப்பு கட்டைகள் கட்டப்பட்டு வருகின்றன.