/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிலக்கடலையில் 'பொக்கு காய்கள்' மகசூல் இழப்பை தடுக்க ஆலோசனை
/
நிலக்கடலையில் 'பொக்கு காய்கள்' மகசூல் இழப்பை தடுக்க ஆலோசனை
நிலக்கடலையில் 'பொக்கு காய்கள்' மகசூல் இழப்பை தடுக்க ஆலோசனை
நிலக்கடலையில் 'பொக்கு காய்கள்' மகசூல் இழப்பை தடுக்க ஆலோசனை
ADDED : ஜூன் 30, 2024 03:39 AM
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 1,000 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் விதைப்பு பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மகசூல் இழப்பை தடுப்பது குறித்து, பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு அறிவுரை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
நிலக்கடலையில் போரான் சத்து பற்றாக்குறையால் நுனி இலைகள் சிறுத்து, உருமாறியும், நடுத்தண்டின் நுனிக்குருத்து கருகியும் விடும். நிலக்கடலை காய்களின் தோலில் கறுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும். பருப்பு சிறுத்தும், பொக்கு கடலைகள் அதிகரித்து மகசூல் இழப்பு ஏற்படும். பருப்பை உடைத்துப்பார்த்தால் அதன் நடுவே குழிவான பழுப்பு நிற பள்ளம் காணப்படும். விதையின் கரு, குருத்து பழுப்பு நிறமாகி கருகி விடும். இதை தடுக்க, ஒரு ஹெக்டேருக்கு, 10 கிலோ போராக்ஸை அடியுரமாக இட வேண்டும். ஒரு லிட்டர் நீருக்கு, 3 கிராம் போராக்ஸ் கரைசலை, பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவங்களில் இலைவழியே, 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.