/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேற்றை அள்ள ரூ.81 லட்சம் ஒதுக்கீடு
/
சேற்றை அள்ள ரூ.81 லட்சம் ஒதுக்கீடு
ADDED : ஆக 02, 2024 01:24 AM
சேலம், சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவுநீரை சுத்திகரிக்க, வெள்ளைகுட்டை, அணைமேடு, மான்குட்டை, வண்டிப்பேட்டை ஆகிய இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், 2023 - 24ம் ஆண்டு, 'அம்ரூத் 2.0' திட்டத்தில் குமரகிரி ஏரி அருகே, 1 எம்.எல்.டி., கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 4.63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
பணி தொடங்க உள்ள நிலையில், கட்டுமானம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த இடத்தை ஆய்வு செய்தபோது சேறு சகதியாக இருந்தது. இதனால் அங்கு துார்வாரி சுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு, 81.11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சேலத்தை சேர்ந்த நிறுவனத்துக்கு, ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இத்தொகை, பொது நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.