/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தனியார் ஆம்னி பஸ் மோதி கட்டட வடிவமைப்பாளர் பலி
/
தனியார் ஆம்னி பஸ் மோதி கட்டட வடிவமைப்பாளர் பலி
ADDED : மே 13, 2024 07:24 AM
சங்ககிரி : கோவை, மசக்காளிபாளையம், நஞ்சப்பா தெருவை சேர்ந்த கணேசன் மகன் வியாசர், 26. பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் கட்டட கலை வடிவமைப்பாளராக பணிபுரிந்தார். இவர் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து, 'யமஹா' பைக்கில், ஹெல்மட் அணியாமல் கோவைக்கு வந்து கொண்டிருந்தார்.
நள்ளிரவு, 12:00 மணிக்கு, சங்ககிரி அடுத்த குப்பனுார் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பஸ்சை முந்த முயன்றார். அப்போது பஸ், பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வியாசர், சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு உயிரிழந்தார். வியாசரின் அண்ணன் விக்னேஷ் புகார்படி, சங்ககிரி போலீசார் விசாரிக்கின்றனர்.