/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பயிர் வளர்ச்சி ஊக்கிகள், விதைகள் 'பார்சல்' மூலம் அனுப்ப ஏற்பாடு
/
பயிர் வளர்ச்சி ஊக்கிகள், விதைகள் 'பார்சல்' மூலம் அனுப்ப ஏற்பாடு
பயிர் வளர்ச்சி ஊக்கிகள், விதைகள் 'பார்சல்' மூலம் அனுப்ப ஏற்பாடு
பயிர் வளர்ச்சி ஊக்கிகள், விதைகள் 'பார்சல்' மூலம் அனுப்ப ஏற்பாடு
ADDED : மே 02, 2024 11:54 AM
பனமரத்துப்பட்டி: பயிர் வளர்ச்சி ஊக்கிகள், விதைகளை, 'பார்சல்' மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் அறிக்கை:
சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படும் நெல், பயறு வகை பயிர்கள், கரும்பு, வாழை, காய்கறி பயிர்கள், மரவள்ளி போன்ற பயிர்களின் சீரான வளர்ச்சிக்கும், நோய் கட்டுப்பாடு உயிரியல் பூஞ்சாணம், பூச்சி கொல்லிகள், அங்கக இடுபொருட்கள் விற்பனைக்கு உள்ளன.
அவை, பேசில்லஸ் சப்டிலிஸ், வேம், டிரைக்கோகிரம்மா விரிடி, மா ஸ்பெஷல், வாழை பூஸ்டர், கரும்பு பூஸ்டர், பயிறு ஒண்டர், நிலக்கடலை ரிச், பருத்தி ஸ்பெஷல், தென்னை டானிக் மற்றும் நெல், காய்கறி விதைகள், அசோலா தாய் வித்து, பஞ்சகவ்யா, கம்பு பிஸ்கட், சிறு தானிய பிஸ்கட் ஆகியவை உள்ளன. தேவைப்படுவோருக்கு தமிழகம் முழுதும் பார்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். மேலும் விபரம் பெற, 0427 - 2422550, 90955 13102 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.