/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்க ஏற்பாடு
/
இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்க ஏற்பாடு
ADDED : ஆக 23, 2024 01:38 AM
சேலம், ஆக. 23-
இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:
சேலம் மாவட்டத்தில் ஆக., 23ல்(இன்று) குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்கள் - 2,698, அரசு, அதன் உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் - 2,339, உயர் கல்வி நிறுவனங்கள் - 114, குழந்தை பராமரிப்பு நிறுவங்கள் - 35ல் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. 1 முதல், 19 வயதுடைய, 11.11 லட்சம் பேர், 20 வயது முதல், 30 வயதுடைய கருவுற்ற பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள் தவிர்த்து, 2.24 லட்சம் பேர் என, 13.35 லட்சம் பேர் பயன்பெற உள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில், முகாம் நடக்கிறது. மக்கள், குழந்தைகளை பயன்பெற செய்து சிறந்த கல்வி திறனுடன் கூடிய ஆரோக்கிய எதிர்கால சமுதாயத்தை உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் சேலம் மாநகராட்சி பகுதிகளில், 2.80 லட்சம் மாணவ, மாணவியருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளதாகவும், விடுபட்டவர்களுக்கு வரும், 30ல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

