/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திறந்தவெளியில் மல, ஜலம் கழிப்பதை தடுக்க ஆட்டோ டிரைவர் மறியல்
/
திறந்தவெளியில் மல, ஜலம் கழிப்பதை தடுக்க ஆட்டோ டிரைவர் மறியல்
திறந்தவெளியில் மல, ஜலம் கழிப்பதை தடுக்க ஆட்டோ டிரைவர் மறியல்
திறந்தவெளியில் மல, ஜலம் கழிப்பதை தடுக்க ஆட்டோ டிரைவர் மறியல்
ADDED : ஆக 22, 2024 02:08 AM

ஆத்துார்:சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி, 10வது வார்டு வடக்கு தில்லை நகரில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் நகராட்சி சார்பில் பொது கழிப்பறை உள்ளது.
அதை, அப்பகுதி மக்கள் பயன்படுத்தாமல், திறந்தவெளியில் செல்வதால் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ், 37, என்பவர், நேற்று காலை, 11:30 மணிக்கு நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம் எதிரே, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டார்.
அப்போது, 'திறந்தவெளியில் மல, ஜலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும்' எனும் வாசகம் அடங்கிய பதாகையை பிடித்திருந்தார். நகராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால், சுரேஷ் எழுந்து சென்றார். இச்சம்பவத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொது கழிப்பறை நல்ல நிலைமையில் உள்ளது. அதை பெரும்பாலானோர் பயன்படுத்துவதில்லை. பெண்கள், சிறுவர்கள் திறந்தவெளியில் மல, ஜலம் கழிக்கின்றனர்.
திறந்தவெளி கழிப்பறை குறித்து மக்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த, பலமுறை நகராட்சி அலுவலகத்தில் கூறியுள்ளோம். அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காணவே மறியலில் ஈடுபட்டேன். மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தினாலும், மக்களின் ஆதரவு சரி வர இல்லாததால், அந்த நிதி வீணாக போகிறது. அது போல இருக்கக் கூடாது என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவே, சாலை மறியலில் ஈடுபட்டேன்.
சுரேஷ், ஆட்டோ டிரைவர்