/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திறந்தவெளியில் கழிப்பிடம் செல்வதை தடுங்க! நகராட்சி ஆபீஸ் முன் பட்டதாரி சாலை மறியல்
/
திறந்தவெளியில் கழிப்பிடம் செல்வதை தடுங்க! நகராட்சி ஆபீஸ் முன் பட்டதாரி சாலை மறியல்
திறந்தவெளியில் கழிப்பிடம் செல்வதை தடுங்க! நகராட்சி ஆபீஸ் முன் பட்டதாரி சாலை மறியல்
திறந்தவெளியில் கழிப்பிடம் செல்வதை தடுங்க! நகராட்சி ஆபீஸ் முன் பட்டதாரி சாலை மறியல்
ADDED : ஆக 22, 2024 01:35 AM
திறந்தவெளியில் கழிப்பிடம் செல்வதை தடுங்க!
நகராட்சி ஆபீஸ் முன் பட்டதாரி சாலை மறியல்
ஆத்துார், ஆக. 22-
திறந்தவெளியில் சிலர் கழிப்பிடம் செல்வதை தடுக்கக்கோரி, பட்டதாரி, நகராட்சி அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டார்.
சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகராட்சி, 10வது வார்டு வடக்கு தில்லை நகரில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் நகராட்சி சார்பில் பொது கழிப்பிடம் உள்ளது. ஆனால், அப்பகுதி மக்கள் பயன்படுத்தாமல் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்வதால் துர்நாற்றம், சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றன. இதுகுறித்து சிலர், நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர், பட்டதாரி சுரேஷ், 37, நேற்று காலை, 11:30 மணிக்கு நரசிங்கபுரம் நகராட்சி அலுவலகம் எதிரே, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டார். அப்போது, 'திறந்தவெளி கழிப்பிடத்தை தவிர்க்க வேண்டும்' எனும் வாசகம் அடங்கிய பதாகையை பிடித்திருந்தார். நகராட்சி அலுவலர்கள் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால், சுரேஷ் எழுந்து சென்றார். இச்சம்பவத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து சுரேஷ் கூறியதாவது: வீடு அருகே பொது கழிப்பிடம் உள்ளது. அதை சிலர் பயன்படுத்துவதில்லை. பெண்கள், சிறுவர்கள் சிலர், வீடு அருகே மட்டுமின்றி தெரு பகுதிகளில் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் வீசும் துர்நாற்றத்தால், நிம்மதியாக சாப்பிட முடியாமல் குமட்டல் ஏற்படுகிறது. நாய், பன்றிகள், அந்த கழிவை உண்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
திறந்தவெளி கழிப்பிடம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. அப்பகுதியில் தடுப்புகள் போன்றவை அமைக்க வேண்டும். மக்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த, பலமுறை நகராட்சி அலுவலகத்தில் கூறியுள்ளோம். அவர்கள் கண்டுகொள்ளாததால் தினமும், 'நரக' வேதனையில் வாழ்கிறோம். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேறு வழியின்றி சாலை மறியலில் ஈடுபட்டேன். இவ்வாறு கூறினார்.