sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிணற்றில் விழுந்த காட்டெருமை 10 மணி நேரத்துக்கு பின் மீட்பு

/

கிணற்றில் விழுந்த காட்டெருமை 10 மணி நேரத்துக்கு பின் மீட்பு

கிணற்றில் விழுந்த காட்டெருமை 10 மணி நேரத்துக்கு பின் மீட்பு

கிணற்றில் விழுந்த காட்டெருமை 10 மணி நேரத்துக்கு பின் மீட்பு


ADDED : ஜூலை 07, 2024 01:20 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏற்காடு : ஏற்காடு, பெலாத்துாரில் உள்ள விவசாய நிலத்தில், 30 அடி ஆழ கிணறு உள்ளது. அதில், அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வந்த காட்டெருமை நேற்று காலை, 7:10 மணிக்கு தவறி விழுந்-தது. உடனே அருகில் இருந்தவர்கள் வனம், தீயணைப்பு துறையி-னருக்கு தகவல் கொடுத்தனர்.

ஏற்காடு வனச்சரக வன அலுவலர் முருகன் உள்ளிட்ட வனத்து-றையினர், தீயணைப்பு துறையினருடன் சேர்ந்து, காட்டெரு-மையை மீட்க முயன்றனர். அங்கு வந்த மாவட்ட வன அலுவலர் கஷ்யப் சஷாங்க் ரவி, எருமையை மீட்க ஆலோசனை வழங்-கினார். தண்ணீர் அதிகம் இருந்ததோடு, கிணறு சிறிதாக இருந்-ததால், எருமையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினர். இதனிடையே, ஓசூரில் இருந்து வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் வரவ-ழைக்கப்பட்டார். அவர், எருமைக்கு மயக்க ஊசி செலுத்தினார். தொடர்ந்து வனம், தீயணைப்பு துறையினர், மக்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி எருமை உடலில் கயிற்றை கட்டினர். பின் மாலை, 5:15 மணிக்கு கிரேன் இயந்திரம் மூலம், எருமையை துாக்கி உயிருடன் மீட்டனர்.






      Dinamalar
      Follow us