/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'வடநாட்டில் பா.ஜ.,வுக்கு ஆதரவு கிடையாது'
/
'வடநாட்டில் பா.ஜ.,வுக்கு ஆதரவு கிடையாது'
ADDED : ஏப் 13, 2024 11:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: சேலம் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து, ஓமலுார் அருகே பஞ்சசுகாளிப்பட்டியில் நேற்று, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், ''வடநாட்டில் பா.ஜ.,வுக்கு ஆதரவு கிடையாது. பலர் கூட்டணியை விட்டு வெளியேறி வருகின்றனர். மத்தியில் மீண்டும் ஆட்சி என பா.ஜ.,வினர் பொய் பேசி வருகின்றனர்,'' என்றார்.
தி.மு.க., லோக்சபா தொகுதி பொறுப்பாளர் வெங்கடேஷ், ஓமலுார் தெற்கு ஒன்றிய செயலர் செல்வகுமரன், மாவட்ட கவுன்சிலர் சண்முகம், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

