/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ., கையெழுத்து இயக்கம்
/
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ., கையெழுத்து இயக்கம்
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ., கையெழுத்து இயக்கம்
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ., கையெழுத்து இயக்கம்
ADDED : மார் 07, 2025 07:47 AM
சேலம் : சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன், மேச்சேரியில் கையெழுத்து நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். மாநில சிறப்பு அழைப்பாளர்கள் பாலகிருஷ்ணன், அண்ணாதுரை, ஒன்றிய தலைவர் முருகன், சத்தியமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் சேலம் மேற்கு மாவட்டத்தில், 26 ஒன்றியங்களில், 10,000 பேரிடம் கையெழுத்து பெறப்பட்டது. அதேபோல் இடைப்பாடியில் நகர பொறுப்பாளர் சிவலிங்கம் தலைமையில் கையெழுத்து இயக்கத்தை, ஹரிராமன் தொடங்கி வைத்தார். இடங்கணசாலை நகர மண்டலம் சார்பில், அதன் தலைவர் கலைச்செல்வி தலைமையில் கையெழுத்து பெற்றனர்.
சேலம் அருகே, பனமரத்துப்பட்டி பிரிவு சாலையில், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன் தலைமையில், மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், மக்களிடம் கையெழுத்து பெறுவதை தொடங்கி வைத்தார். மாவட்ட பொதுச்செயலர் ராஜேந்திரன், வீரபாண்டி தொகுதி பொறுப்பாளர் வெங்கடாசலம், மாநில பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் சின்னுராஜ், பனமரத்துப்பட்டி ஒன்றிய தலைவர் நிர்மலா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல் அயோத்தியாப்பட்டணம் ரயில்வே கேட் அருகே, சண்முகநாதன் தலைமையில், சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத் தொடங்கி வைத்தார். மாவட்ட பொதுச்செயலர்கள் ராமச்சந்திரன், குமார், ராஜா, ராஜேந்திரன், இளைஞரணி தலைவர் குணசேகரன், ஒன்றிய தலைவர்கள் மாதேஸ்வரன், சக்திவேல், ரேகா உள்பட பலர் பங்கேற்றனர்.