/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பேராசிரியைக்கு பதவி வழங்க மறுப்பால் கண்டனம்
/
பேராசிரியைக்கு பதவி வழங்க மறுப்பால் கண்டனம்
ADDED : ஜூன் 27, 2024 04:08 AM
ஓமலுார்: பட்டியலின பேராசிரியைக்கு துறைத்தலைவர் பதவி வழங்க துணைவேந்தர் மறுப்பதாக, சேலம் பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்ட அறிக்கை:
பெரியார் பல்கலை கல்வி யியல் துறைத்தலைவர் நாச்சிமுத்து ஓய்வு பெற்ற நிலையில், அத்துறை மூத்த பேராசிரியை தனலட்சுமி, துறைத்தலைவராக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் துணைவேந்தர் ஜெகநாதன், தமிழ் துறைத்தலைவர் பெரியசாமியை, அப்பொறுப்பில் அமர்த்த, சர்ச்சை ஏற்பட்டது. அவரே அப்பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனால் உறுப்பு கல்லுாரியில் முதல்வராக இருந்து பல்கலைக்கு மாற்றப்பட்ட வெங்கடேஸ்வரனுக்கு, அப்பொறுப்பு வழங்கப்பட்டதாக அறிகிறோம். இது விதிமீறல். தகுதியான பேராசிரியை உள்ள நிலையில் அவர் பட்டியலினம் என்பதால் புறக்கணிக்கப்பட்டுள்ளார். துணைவேந்தரின் இப்போக்கு கண்டனத்துக்குரியது. அதனால் வெங்கடேஸ்வரனை விடுவித்து, தனலட்சுமிக்கு துறைத்தலைவர் பதவி வழங்க வேண்டும்.