/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பல்கலை துணைவேந்தர் பணி நீட்டிப்புக்கு கண்டனம்
/
பல்கலை துணைவேந்தர் பணி நீட்டிப்புக்கு கண்டனம்
ADDED : ஜூன் 30, 2024 02:16 AM
ஓமலுார்,
சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதற்கு, ஆசிரியர், தொழிலாளர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம், பல்கலை தொழிலாளர் சங்கம் இணைந்து வெளியிட்ட அறிக்கை:
பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதனுக்கு, 2025 மே, 19 வரை பணி நீட்டிப்பு வழங்கியதை வன்மையாக கண்டிக்கிறோம். 70 வயதை அடையவுள்ள அவருக்கு பணி நீட்டிப்பு என்பது, திறமையானவர்களின் குரல் வளையை நெறிப்பது போலாகும். குற்ற வழக்கில் ஈடுபட்டு தற்போது நீதிமன்ற பிணையில் உள்ள நிலையில், பணி நீட்டிப்பு வழங்கியது நியாயமற்றது.
பொறுப்பு பதிவாளராக இருந்த தங்கவேலுவை, 'சஸ்பெண்ட்' செய்ய இருமுறை, துணைவேந்தருக்கு அரசு அறுவுறுத்தியும் அதை மதிக்காமல், அவருக்கு கவர்னர் ரவி ஓய்வு வழங்கினார்.
தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கவே பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் சங்கம், பல்கலை ஆசிரியர் சங்க கூட்டமைப்பு சார்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.