/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காங்., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
/
காங்., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 02, 2024 01:41 AM
ஆத்துார்,
காங்., கட்சியின், சேலம் கிழக்கு மாவட்டம் சார்பில் ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமை வகித்தார். அதில், பார்லிமென்ட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுலை அவதுாறாக பேசிய எம்.பி., அனுராக் தாகூரை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அனுராக்தாகூரின் புகைப்படத்தை, காங்., கட்சியினர், காலணி, துடைப்பத்தால் அடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஆத்துார் நகர தலைவர் முருகேசன், மாவட்ட பொருளாளர் ஓசுமணி, நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதேபோல் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில், இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். அதில் எம்.பி., அனுராக் தாக்கூர், பிரதமர் மோடியை கண்டித்து கோஷம் எழுப்பினர். இடைப்பாடி நகர தலைவர் நாகராஜன், மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.