தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வீட்டுமனை பட்டா கேட்டு மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

வீட்டுமனை பட்டா கேட்டு மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

வீட்டுமனை பட்டா கேட்டு மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 10, 2024 07:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2024 07:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: கெங்கவல்லி தாலுகா அலுவலகம் முன், மா.கம்யூ., சார்பில் தாசில்தாரிடம் மனு கொடுக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தாலுகா செயலர் தமிழ்மணி தலைமை வகித்தார்.

தம்மம்பட்டி, கடம்பூர், மண்மலை, செந்தாரப்பட்டி பகுதிகளில் வசிக்கும் வீடற்ற மக்களுக்கு, 8 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தும் வழங்காததை கண்டித்து கோஷம் எழுப்பினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குணசேகரன், முருகேசன், தாலுகா நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து தாசில்தார் பாலகிருஷ்ணனிடம், 350 மனுக்களை வழங்கினர். அதற்கு தாசில்தார், 'வரும், 14ல் ஆய்வு செய்யப்-படும். தகுதியான பயனாளிகளுக்கு, பட்டா, வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

கட்சியினர், 'வரும், 25க்குள் தீர்வு கிடைக்கவில்லை எனில், 29ல் ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும்' என கூறிச்சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us